வெங்கட்பிரபுவின் மாநாடு திரைப்படத்தின் பெயர் இதுதான் இதோ அவரே அறிவித்து விட்டார்.!

நடிகர் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கட் பிரபு திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும், இந்த நிலையில் சிம்பு வெங்கட்பிரபு கூட்டணியில் மாநாடு உருவாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடமும் இருக்கிறது.

இந்த நிலையில் மாநாடு திரைபடத்தில் சிம்புவின் கதாபாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என ரசிகர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது, அதேபோல் படத்தில் சிம்பு இஸ்லாமியராக நடிக்கிறார் என கூறப்படுகிறது அதன்படி ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த இஸ்லாமிய பெயரை சிம்புவிற்கு பரிந்துரை செய்தார்கள்.

இந்நிலையில் வெங்கட்பிரபு மற்றும் படக்குழு சிம்புவின் பெயரை அப்துல் காலிக் என தேர்வு செய்துள்ளது, இதனை வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடினார் சிம்பு படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பெயரை வெளியிட்டு உள்ளார்கள்.

Leave a Comment