பல்லிக்கூட கொஞ்சம் குண்டா இருக்கும்.. தலைவர உங்களுக்கு என்ன ஆச்சு.! ரோபோ சங்கரை அடுத்து மிகவும் ஒல்லியாக இருக்கும் பிரபல நடிகர்.!

தென்னிந்திய சினிமாவில் காமெடி நடிகனாகவும் குணசத்திர வேடத்திலும் நடித்து வந்தவர் ரோபோ சங்கர் இவர் பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் மாரி திரைப்படத்தில் கூட தனுஷ் அவர்களுடன் நடித்திருந்தார். ஆனால் ரோபோ சங்கர் திடீரென சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் உடல் எடை முழுவதும் குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என அனைவரும் கேள்வி எழுப்பி வந்தார்கள்.

இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் நடிகராகவும் முன்னணி இயக்குனராகவும் வளம் வருபவர் வெங்கட் பிரபு இவர் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி வந்தார். அதிலும் அஜித்தை வைத்து மங்காத்தா என்ற திரைப்படத்தை இயக்கிய மாபெரும் வெற்றி கண்டார். மேலும் சென்னை 600028, சரோஜா ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இந்த நிலையில் தற்பொழுது நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

கஸ்டடி திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். அதனால் துபாயில் அதன் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவுடன் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார்.

venkat prabhu
venkat prabhu

இந்த புகைப்படத்தில் வெங்கட் பிரபு மிகவும் ஒல்லியாக இருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ரோபோ சங்கர் தான் ஒல்லியாக இருக்கிறார் என்றால் நீங்கள் அதைவிட ஒல்லியாக இருக்கிறீர்களே உங்களுக்கு என்ன ஆச்சு என அதிர்ச்சி அடைந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment