மாநாடு திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு.!உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

தனது குழந்தை பருவத்தில் இருந்தே தமிழ் சினிமா உலகில் நடித்து வரும் நடிகர் என்றால் அது சிம்பு தான் இவர் சிறு வயதிலிருந்தே பல திரைப்படங்களில் நடித்து பின்பு கதாநாயகனாக தற்போது வலம் வருகிறார் மேலும் சிம்பு ஒரு சில மாதங்களுக்கு முன்பு உடல் எடை கூடி குண்டாக இருந்தார் அப்போது அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.

அந்த தருணத்தில் சிம்பு தனது உடல் எடை முழுமையாக குறைத்துக்கொண்டு சினிமாவிற்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் ஆள் அடையாளமே தெரியாமல் நடித்திருந்தார்.

சிம்பு சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் திரைப் படத்திற்கு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் மாநாடு திரைப்படம் முதலில் பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்தது இந்நிலையில் சிம்பு சமீபத்தில் கூட மக்களுடன் மண்ணில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படத்தை வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து சிம்புவுடன் இணைந்து மாநாடு திரைப்படத்தில் பிரேம்ஜி,எஸ் ஜே சூர்யா,கல்யாணி பிரியதர்ஷன்,பாரதிராஜா,கருணாகரன் போன்ற பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு மாநாடு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கல்யாணி பிரியதர்ஷன் இவர் தனது 28வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார் அந்த வகையில் அவருக்கு பல சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவர் மாநாடு திரைப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை கூறியுள்ளார் ஆம் மாநாடு திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சீதாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

இந்த தகவல் தற்போது சிம்பு ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version