பிரபல நடிகையுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குழப்பம் வெங்கட் பிரபு.! இதுக்கு பருத்தி மூட்டை குடவுன்லேயே இருக்கலாம்

Sneha : வெங்கட் பிரபு இயக்குனராகவும் நடிகராகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் இயக்கிய சென்னை 600028, மங்காத்தா, மாநாடு போன்ற படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்பொழுது விஜய் வைத்து தளபதி 68 படத்தை எடுக்க இருக்கிறார். அந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள்ச அளவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார்.

அண்மையில் விஜய் வெங்கட் பிரபு தயாரிப்பாளர் ஆகியவர்கள் அமெரிக்க சென்று தளபதி 68 படத்திற்காக புதிய தொழில்நுட்பத்தை பார்த்துவிட்டு திரும்பினார் வரும் வழியில் சூர்யாவையும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது அதனை தொடர்ந்து இந்த படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

அதாவது தளபதி 68 யில் விஜயுடன் இணைந்து பிரபுதேவா, பிரசாந்த் போன்றவர்கள் நடிப்பார்கள் என கூறப்பட்டது ஆனால் நடிகைகள் விஷயத்தில் பல பேச்சுகள் எழுந்தது அதாவது ஜோதிகா மற்றும் பிரியங்கா அருள் மோகன் முதலில் நடிப்பதாக பேச்சுக்கள் இருந்தன.

அதன் பிறகு ஜோதிகா விலகியதாக கூறப்பட்டதை அடுத்து சிம்ரன் நடிக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கு என கூறினார் கடைசியாக சினேகாவை லாக் பண்ணியதாக கூறப்படுகிறது ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை இந்த நிலையில் நடிகை சினேகாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபு  வெளியிட்டார்.

இதை பார்த்த ரசிகர்கள் சினேகா தளபதி 68 படத்தில் நடிப்பது உறுதி என கமெண்ட் அடித்தனர். பின்பு தான் தெரிந்தது தளபதி 68 படத்திற்கு கிடையாது சினேகா மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இணைந்து நடிக்கும் ஷாட் பூட் த்ரீ படத்தின் படப்பிடிப்பில் இது எடுக்கப்பட்டது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Vengat prabhu
Vengat prabhu