ஹாரர் த்ரில்லரில் மிரட்டும் வெங்கட்பிரபு வெப் சீரியஸ்.! இது வெங்கட் பிரபு சீரியஸ்.! டைட்டில் என்ன தெரியுமா.?

ஊரடங்கு காரணமாக அனைத்துவிதமான தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது அதிலும் சினிமா துறையை பொருத்தவரை திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்புகள் எதுவும் நடக்காமல் சினிமா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் படத்தை எடுத்துவிட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் ஓ டி டி இணையதளத்தில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு கடந்த 15 ஆம் தேதி முதல் 50 சதவீதம் occupancy இல் படத்தை காணலாம் என அறிவித்திருந்தார்கள் ஆனால் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் படப்பிடிப்பிற்கு சில தளர்வுகள் உடன் நடத்த அனுமதி வழங்கியுள்ளது அதனால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் தொடங்கிவிட்டது, மக்களுக்கு பொழுது போக்காக அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் ஆகிய ஓட்டி டி தளங்கள் இருந்து வருகிறது. அதில் புதிய புதிய திரைப்படத்தையும் வெப்சீரிஸ் களையும் பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான கௌதம் மேனன் வெப் சீரியஸ் இயக்க ஆரம்பித்து விட்டார் அவரை தொடர்ந்து தற்போது வெங்கட்பிரபுவும் வெப் சீரியஸ் களத்தில் இறங்கிவிட்டார், அதற்கு டைட்டிலாக லைவ் டெலிகாஸ்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வெப் சீரியஸில் காஜல் அகர்வால், ஆனந்தி, சத்யராஜ் என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்தநிலையில் இந்த வெப் சீரியஸ் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் இது ஒரு திரில்லர் கலந்த ஹாரர் சீரியஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment