சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படம் – 7 நாட்கள் முடிவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

திரை உலகில் இருக்கும் உச்ச நட்சத்திர நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தை சூப்பராக கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர் அந்த வகையில் நடிகர் சிம்பு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கம்பேக்  கொடுத்து தற்பொழுது நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடித்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார் ஐசரி கணேஷ் இந்த படத்தை பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்தார். வெந்து தணிந்தது காடு  படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், neeraj madhav,  kayadu lohar, siddhi idnani ஒவ்வொருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தனர். குறிப்பாக சிம்பு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார் என்று தான் கூற வேண்டும்.  இந்த படத்தில் சின்ன வயது பையனாக நடித்து  பின் கதைக்கு ஏற்றவாறு தனது உடல் அமைப்பை மாற்றி நன்றாக நடித்திருந்தால் இது இந்த படத்திற்கு வெற்றிக்கு பிளஸ் ஆக அமைந்தது.

படத்தை பார்த்த மக்கள் மற்றும் ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை ஆரம்பத்திலேயே கொடுத்தனர். அதன் காரணமாக வசூலும் ஓரளவு நன்றாகவே அள்ளியது. நாட்கள் போக போக படம்  நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தாலும்  எதிர்பார்த்த அளவிற்கு வசூல் வரவில்லை..

இந்த நிலையில் நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி 7 நாட்கள் முடிவில்  இதுவரை  ஒட்டுமொத்தமாக சுமார் 52 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல்ல குறைந்தாலும் சில கோடிகளை அள்ளும் என படக்குழு நம்பி இருக்கிறது.

Leave a Comment