கமலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சூப்பரான பதிவு போட்ட வேம்புலி.! தீயாய் பரவும் செய்தி.

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிகண்ட திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படம் திரையரங்கில் வெளிவந்திருந்தால் மிகப்பெரிய வசூலை ஈட்டுவதோடு, ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி இருப்பார்கள்.

ஆனால் இப்பொழுதும் ஒன்றும் பஞ்சமில்லை OTT வெளியாகி இருந்தாலும் நல்ல லாபத்தை பெற்று தற்போது சிறப்பாகத்தான் ஓடி வருகிறது அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் நடித்தவர்கள் ஒவ்வொருவரும் தனது அசாதாரணமான நடிப்பை கொடுத்து படத்திற்கு உயிர் ஊட்டினர்.

மேலும் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை வியக்க வைத்தனர். அதனால் தான் இந்த படம் OTT தளத்தில் வெளியாகி இருந்தாலும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்தப் இப்படத்தில் ஆர்யா, கலையரசன், பசுபதி, ஜான் கொக்கின், சபீர், ஜான் விஜய் போன்ற பலரின் நடிப்பு வேற லெவல் இருந்தது.

படத்தை பார்த்துவிட்டு ஒவ்வொருவரையும் புகழ்ந்து தள்ளினர் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன். சார்பட்டா பரம்பரை இப்படத்தில் நடித்த அனைவரும் ஒன்றுகூட்டி சந்தித்தார்.

sarpatta
sarpatta

மேலும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கின் கமலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பரப்பினார்.

sarpatta
sarpatta

சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த எங்கள் அனைவரையும் வாழ்த்தியது எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது என தெரிவித்தார் மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டு மாறுவேடம்  போடுவதில் கமலுக்கு நிகர் வேறு யாருமில்லை என தெரிவித்தார் அவரை கண்டு தான் நான் தோற்றமும் மாறுவதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன் என குறிபிட்டார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment