AK 61 படத்தில் வேம்புலியை தொடர்ந்து அஜித்தை மிரட்ட களமிறங்கிய இரண்டாவது வில்லன் – யார் தெரியுமா.?

நடிகர் அஜித்குமார் இளம் இயக்குனர்களுக்கு அண்மை காலமாக அதிக வாய்ப்புகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சிறுத்தை சிவாவை தொடர்ந்து ஹச். வினோத்துடன் இரண்டு முறை கூட்டணி அமைத்து நிலையில் மூன்றாவது முறையாக அஜித்துடன் இப்போ இணைந்துள்ளார்.

படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் குறிப்பாக எடுக்கப்பட்டு வருகிறது பிரமாண்ட பொருட்செலவில் போனிகபூர் இந்த படத்தை எடுத்து வருகிறார் படம் போன்று இந்த படம் இருக்காமல் சற்று வித்தியாசமான கதையாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது இந்த படத்தின் ஷூட்டிங் இதுவரை 32 நாட்கள் வெற்றிகரமாக முடித்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

AK 61படத்தில் அஜித்துடன் இணைந்து சமுத்திரகனி மஞ்சு வாரியர் john kokken மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக  john kokken நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்த நிலையில் அவரை தொடர்ந்து மற்றொரு ஹீரோ வில்லனாக இந்த படத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

அந்த வில்லன் வேறு யாருமல்ல நடுநிசி நாய்கள் படத்தில் வில்லனாகவும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த இளம் ஹீரோ வீரா தான் அஜித்திற்கு இரண்டாவது வில்லனாக AK 61 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இன்னும் ஓரிரு நடிகர்களில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது அந்த அளவிற்கு இந்த படம் ஆக்ஷன் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Comment