தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் இறுதியாக தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளிவந்து இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் மம்முட்டி மகனாக வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானதால் சினிமாவில் எளிதில் பிரபலமடைந்தார். இந்நிலையில் சூரி பிக் பாஸ் முகேன் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் வேலன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை துல்கர் சல்மான் தனது இணையதளத்தின் வழியாக வெளியிட்டுள்ளார்.
வேலன் திரைப்படத்தை ஸ்கை மேன் பிலிம் இன்டர்நேஷனல் கலைமகள் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்ட உடனே இதற்கான ஆதரவு பெருமளவில் கிடைத்துள்ளது அதோடு லைக்குகளும் குவிந்து வருகிறது.

முகேன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல நாட்டில் உள்ள மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். அந்த வகையில் சிங்கப்பூர்,மலேசியா, கனடா,தமிழ் உள்ளிட்ட பல நாடுகளில் இவருக்கு ரசிகர் பட்டாளம் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வேலன் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.

இந்தத் திரைப்படத்தை ஏன் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளத்தின் மூலம் வெளியிட்டார் என்றால் வேலன் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் துல்கர் சல்மானும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தங்களது இணையதளத்தின் வழியாக நடிகர் பிரபு இருக்கும் ஒரு போஸ்டரையும் நடிகர் சூரியனுக்கும் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள்.
