இந்த விஜய் டிவி சீரியல் அச்சு அசல் ரஜினியின் முத்து படம் போலவே இருக்கிறது.! பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.அந்த வகையில் பல புதிய சீரியல்களையும் கவர்ச்சியில் ஆர்வமுள்ள புதுமுக நடிகைகள் மற்றும் நடிகர்களையும், அறிமுகப்படுத்தி தங்களது டிஆர்பி-யை எகிற வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் புதிதாக அறிமுகமான ஒரு சீரியல் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் கதையை அப்படியே காப்பி அடித்து அந்த சீரியலை ஒளிபரப்பி வருவதாக நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள். ஒரு சீரியலை புதிதாக அறிமுகப்படுத்தினால் அந்த சீரியலின் ஒவ்வொரு காட்சியையும் யோசித்து செய்ய வேண்டும்.

ஏனென்றால் அந்தக் கதை நன்றாக இருந்தால் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய ஆனால் தற்போது ஒரு திரைப்படத்தை அப்படியே காப்பியடித்து சீரியலாக மாற்றுவதால் நெட்டிசன்கள் விஜய் டிவி நிறுவனம் ஈசியாக மாற்றி சீரியல்களை இயக்குகிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.

பொதுவாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என்று அனைத்துமே மற்ற தொலைக்காட்சிகளை விடவும் மிகவும் அற்புதமாக ஒளிபரப்புவார்கள்.  இவர்கள் பொதுவாக காமெடி கலந்ததாகவும் சுவாரசியமாகவும் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

ஆனால் ஒரு சில சீரியல்கள் மட்டும் அட்டை காப்பி அடித்து வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள். அந்த வகையில் ராஜா ராணி சீரியல் ஹிந்தியில் ஒளிபரப்பான ஒரு சீரியலை அப்படியே தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் இதுதான் தற்போழுது டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது இந்த சீரியல் ஆனந்தம் திரைப்படத்தினை அப்படியே அப்பட்ட காப்பி அடித்து உள்ளார்கள்.

இதனை கூட ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் ஆனால் தற்பொழுது மிகவும் அப்பட்டமாக தெரியும் அளவிற்கு ஒரு திரைப்படத்தை அப்படியே காப்பியடித்து புதிய சீரியல் ஒன்றை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமான சீரியல்தான் வேலைக்காரன்.

இந்த சீரியலில் யூடியூப் சேனலின் மூலம் பிரபலமடைந்த ஒருவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த ஹீரோ வேலைக்காரனாக பல வருடங்களாக எஜமானர் வீட்டில் வேலை செய்து வருபவர் அதன்பிறகு சமீபத்தில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு நீதான் இந்த அனைத்து சொத்துகளுக்கும் உண்மையான சொந்தக்காரன் என்று  எஜமானியாக நடித்து வந்த அவர் கூறுவார்.

velaikkaran
velaikkaran

அந்த வகையில் இந்த திரைப்படம் ரஜினி நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த முத்து திரைப்படத்தில் இருந்து அப்படியே காப்பி அடிக்கப்பட்டுள்ளது. முத்து திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு காட்சியும் வேலைக்காரன் சீரியலில் பெரிதளவில் இடம்பெற்று வருகிறது. இந்த சீரியலை நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Leave a Comment