எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வேல ராமமூர்த்தி எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?

Ethirneechal serial: எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வரும் வேல ராமமூர்த்தி எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அப்படி முக்கியமாக இல்லத்தரசிகளின் மத்தியில்தான் அமோக வரவேற்பு உள்ளது.

படித்த பெண்களை திருமணம் செய்து கொண்டு வீட்டில் அடிமையாக நடத்தி வரும் ஆண்களை எதிர்த்து எப்படி போராடுகிறார்கள் அவர்களுடைய வாழ்க்கை எப்படி உள்ளது என்பதை உன்னத பூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் எதிர்நீச்சல் சீரியலின் கதைகளும் அமைந்துள்ளது.

BIGGBOSS 7 : இந்த வாரம் எலிமினேஷன் இல்லை.. தப்பிய நிக்சன்.. அறிவித்த விஜய் டிவி

இந்த சீரியலில் நடித்தவரும் அனைத்து கேரக்டர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வரும் நிலையில் முக்கியமாக இந்த சீரியலின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது ஆதி குணசேகரன் கேரக்டர் தான். ஆதி குணசேகரன் ஆக இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து நடித்து வந்தார் சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார்.

இது மக்கள் மத்தியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியது. எனவே குணசேகரன் கேரக்டரில் தற்பொழுது திரைப்படங்களில் வில்லனாக நடித்த வரும் வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரன் ஆக நடித்து வருகிறார். இவருடைய கேரக்டருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் சீரியல் டிஆர்பியில் நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.

தியேட்டர் கிழிய போகுது.. தளபதி 68 படத்தில் மொத்தம் இத்தனை பாடல்களா.? குஷியில் ரசிகர்கள்

இந்நிலையில் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டு சீரியல்களிலும் நடித்து வரும் வேல ராமமூர்த்தி சமீப காலங்களாக பட வாய்ப்புகள் குவிந்து வருவதனால் அதனை நிராகரித்துவிட்டு சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார். எனவே இதன் காரணமாக ஒரு மாதத்திற்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

Exit mobile version