பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வீரா ராஜ வீர பாடல் வெளியீடு.!

மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விட்டது மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகஉள்ளது.

இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் இரண்டாம் பாகம் எப்படியாவது பார்க்க வைக்க வேண்டும் என்று மணிரத்னம் பரபரப்பான காட்சிகளில் முடித்துவிட்டார் தற்பொழுது இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.இதனை தொடர்ந்து இந்த இரண்டாம் பாகத்தில் விக்ரம்,சரத்குமார், பிரகாஷ்ராஜ்,பார்த்திபன்,ஐஸ்வர்யாராய், த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளதால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்பது மட்டும் தெரிகிறது.

மேலும் இந்த திரைப்படத்தின் வீரா ராஜ வீர பாடல் வெளியீடு ரசிகர்களுக்கு நேற்று அறிவித்து இருந்தார்கள் அதற்கு ஏற்றது போல் தற்பொழுது அந்த பாடலை வெளியிட்டுள்ளார்கள் மேலும் இந்த பாடலின் லிரிக் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் குதித்து வருகிறார்கள் என்றே கூறலாம்.

அது மட்டுமல்லாமல் இந்த பாடலை கேட்கும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கிறது இந்த லிரிக் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மிகவும் தரமாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.என ரசிகர்கள் பலரும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக இந்த இரண்டாம் பாகம் பல கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது இதில் அனைத்து பிரபலங்களின் நடிப்பையும் பார்க்க ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.தற்பொழுது இந்த லிரிக் வீடியோ சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த லிரிக் வீடியோ மிகவும் அழகாக இருக்கிறது என ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.

Leave a Comment