இதெல்லாம் ஒரு வயது வித்தியாசமா பாஸ் வேதாளம் பட வில்லன் காதலிக்கும் பெண் வயது என்ன தெரியுமா தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராகுல் தேவ் இவர் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய நரசிம்மா திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார், இந்த திரைப்படத்தை தொடர்ந்து பரசுராம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். பின்பு ஜெயம்ரவியின் மழை, லாரன்ஸின் முனி, சூர்யாவின் ஆதவன், அர்ஜூனின் ஜெய்ஹிந்த், விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள, அர்ஜுனின் வேதாளம் என பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்தநிலையில் 2009ஆம் ஆண்டு நடிகர் ராகுல் தேவ் மனைவி ரீனா புற்றுநோயால் உயிரிழந்து விட்டார் இவர்களுக்கு சித்தார்த் என்ற மகன் இருக்கிறார் இவருக்கு தற்போது வயது 24 ஆகும், மனைவி இறந்த பிறகு கடந்த 11 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் தன் மகனுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஒருவரை காதலித்து வருகிறார் என்றும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளன.

இதில் என்ன ஒரு விஷயம் என்றால் இவர் காதலிக்கும் நடிகை முக்தா கோட்சே என்பவருக்கு தற்பொழுது தான் வயது 33 ஆகிறது ஆனால் ராகுல் தேவ் வயது 51 ஆகும். இந்த நிலையில் இவர்களுக்கு தற்போது 18 வயது வித்தியாசம் இருக்கிறது.

இதுபற்றி ராகுல் தேவுடம் கேட்டதற்கு திருமண விழாவில் அவரை சந்தித்தேன் பிறகு இருவரும் அடிக்கடி சந்திக்கும் நிலைமை ஏற்பட்டது அதனால் ஒன்றாக பழகினோம், பின்பு காதலில் விழுந்து எங்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் இருப்பது உண்மைதான் ஆனால் காதலுக்கு வயது ஒரு தடை கிடையாது நாங்கள் மகிழ்ச்சியாக தான் இருக்கிறோம் என கூறினார்.

அதேபோல் தமிழ்சினிமாவில் ஆர்யா-சாயிஷா வயது வித்தியாசம் இறுந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள், அந்த லிஸ்டில் இவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

Leave a Comment