வாத்தியாராக இருந்து கொண்டு டீச்சரை கரக்ட் செய்தாரா தனுஷ்.! இதோ வெளியானது வாத்தி டிவிட்டர் விமர்சனம்.!

0
vaththi
vaththi

சமீபகாலமாக தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் ஹீரோக்களை வைத்து இயக்குவது தொடர்ந்து வருகிறது அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் தான் இயக்கினார். அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள வார்த்தை திரைப்படத்தையும் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் தமிழில் வாத்தி எனவும் தெலுங்கில் சார் எனவும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தை தமிழக விநியோக உரிமை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

படத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வாத்தி திரைப்படம் உருவாகியுள்ளது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்பதை இன்று தெரிந்துவிடும் இன்று திரையரங்கில் வாத்தி திரைப்படம் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்தில் தனுஷ், பாலமுருகன் என்ற கதாபாத்திரத்தில்  ஆசிரியராக நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சமுத்திரகனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு மொட்டை ராஜேந்திரன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் தமிழைத் தாண்டி தெலுங்கு ரசிகர்களும் வாத்தி திரைப்படத்திற்கு ட்விட்டரில் வாழ்த்துக் கூறியுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் படத்தை பார்த்த சிலர் ட்விட்டரில் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

வாத்தி திரைப்படம் சூப்பரான என்டர்டைன்மென்ட்டாக இருந்தது எனவும் செகண்ட் ஆஃப் ஃபர்ஸ்ட் ஆஃப் ஐ விட பிரமாதமாக இருந்தது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

வாத்தி திரைப்படத்தில் தனுஷ் அற்புதமாக நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் சம்யுக்தா மேனன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார் எனவும் இவர் தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் எனவும் கூறியுள்ளார்.