வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிக்கொண்டே கேவலமாக கூட்டும் விஜே ரம்யா.! வைரலாகும் வீடியோ

சினிமாவில் எப்படி நடிகர்,நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டு அதுபோல  சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் அந்த வகையில் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜே ரம்யா இவரை  மிகப் பெரிய ரசிகர் கூட்டம் பின் தொடர்ந்து வருகிறது.அந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

விஜே ரம்யா அவர்கள் சின்னத்திரையில் மட்டுமல்லாமல், பொது நிகழ்ச்சி, ரியாலிட்டி ஷோ ,இசை வெளியீட்டு விழா ,கலைநிகழ்ச்சி விழா என அனைத்திலும் தனது சிறந்த தொகுப்பினை வழங்கி வருகிறார். ரம்யா அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தினை விஜே ரம்யா பெரிதும் எதிர்பார்த்துள்ளார் அது மட்டுமில்லாமல் பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்ததே.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் ரம்யா அவ்வபொழுது தனது க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு தனது ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் தற்சமயம் கொரோனா வைரஸ் பரவி வருவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தடை ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வீட்டிலேயே முடங்கியுள்ள ரம்யா பொழுதுபோக்காக விழிப்புணர்வு வீடியோ,வீட்டில் வேலை செய்வது, பாட்டு பாடுவது என பலவற்றை செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவது அந்த வகையில் தற்பொழுது மாஸ்டர் படத்தில் உள்ள வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு கையில் துடைப்பத்துடன் டான்ஸ் ஆடிய ரம்யா வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

Leave a Comment