வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வரலட்சுமி சரத்குமார்.! இது என்ன ஸ்டெப் என கலாய்க்கும் ரசிகர்கள்.!

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த பொங்கல் தின ஸ்பெஷலாக திரையரங்கில் வெளியிடப்பட்டது. வெறும் 50 சதவீத திரையரங்கு இருக்கைகளுடன் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன் கௌரி கிஷன், மகேந்திரன், சஞ்சீவ் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, சாந்தனு பாக்கியராஜ், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள்.  இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆனது.

இந்த படத்தில் உள்ள வாத்தி கம்மிங் பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி வைரலானது இதற்கு பல பிரபலங்களும் குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு வந்தார்கள். அந்த வகையில் தற்பொழுது வரலட்சுமி சரத்குமார்  வாத்தி கம்மிங் பாடல் வீடியோவுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வசூல் செய்தது என தகவல் கிடைத்துள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி பல மாதங்கள் ஆனாலும் இன்னும் இந்த திரைப்படத்தின் பாடலான வாத்தி கம்மிங் பாடல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல திருமண விழா ஒன்றில் வரலட்சுமி சரத்குமார் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அப்பொழுது பல பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதேபோல் விஜய்யின் மாஸ்டர் திரைப்பட பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ.. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment