வாத்தி கம்மிங் பாடலில் இதை உற்றுக் கவனித்தீர்களா.! அட ச்ச இதுல இவ்வளவு விஷயம் இருக்கா.!

உலக அளவில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் நடிகர் விஜய், இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மகனும் நடித்துள்ளார்கள்.

master
master

மேலும் சாந்தனு பாக்யராஜ் ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா கௌரி கிஷன், என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய்யின் நண்பர்களும் நடித்துள்ளார்கள், நடிகை விஜய் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்னே நண்பர்களாக இருந்தவர் சஞ்சீவ் இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் மூவரும் விஜய் அவர்களுடன் காலங்காலமாக நண்பராக இருந்து வருகிறார், இதில் ஸ்ரீமன் மற்றும் சஞ்சீவ் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார்கள் அதேபோல் ஸ்ரீநாத் விஜய் நடிப்பில் வெளியாகிய நாளைய தீர்ப்பு படத்திலும் வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இவர்கள் மூவரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்கள், இந்த நிலையில் சமீபத்தில் வாத்தி கம்மிங் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது, அதேபோல் இதற்கு முன் குட்டி ஸ்டோரி என்ற விஜய் பாடிய பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் தற்போது வெளியாகியுள்ள வாத்தி கம்மிங் பாடல் வைரலாகி வருகின்ற நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெறும் விஜயின் நண்பர்கள் என்ன கதாபாத்திரமாக இருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.

master
master

இந்த நிலையில் வாத்தி கம்மி என்ற பாடலில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் நடனமாடும் புகைப்படம் ஒன்று இடம்பெற்றுள்ளது அந்த புகைப்படத்திற்கு பின்னால் அலுமினி ரியூனியன் எனக் குறிப்பிட்டுள்ளார்கள், அப்படி என்றால் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என தெரிகிறது, எனவே இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் முன்னாள் மாணவர்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் மாணவர் சங்க தலைவராக நடித்திருப்பார் என கிசுகிசுப்பு கிளம்பிவிட்டது.

Leave a Comment