முக்கிய இடத்தில் வாரிசு படத்தின் வசூலை முறையடித்த “வாத்தி”.? அடுத்த லெவலுக்கு உயர்ந்த தனுஷ்

0
vaathi-
vaathi-

நடிகர் தனுஷ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்கவும் முடியாத ஒரு பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த  திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் கூட நல்ல வெற்றியை பதிவு செய்தது அதனைத் தொடர்ந்து  தனுஷ் நடிப்பில் வெளியான “வாத்தி” திரைப்படம் சக்க போடு போட்டு வருகிறது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில்  தனுஷ் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கல்வி சம்பந்தமான ஒரு படமாக இருந்ததால் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்ப்பை ஆரம்பத்திலேயே பெற்றது  இப்பவும் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வருவதால் தொடர்ந்து வசூலிலும் எந்த குறையும் வைக்காமல்  அடித்து நொறுக்கி வருகிறது.

நேற்று அதிகாரப்பூர்வமாக படக்குழு மூன்று நாட்களில் 51 கோடி வசூல் செய்ததாக சொல்லியது. 4 நாட்கள் முடிவில் உலக அளவில் வாத்தி திரைப்படம் சுமார் 55 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற நாட்களிலும் வாத்தி திரைப்படத்தின் வசூல் குறையாது என சொல்லப்படுகிறது.

இதனால் வாத்தி திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைவது உறுதி என பலரும் சொல்லி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் பல்வேறு டாப் நடிகர்களின் வசூல் சாதனையை முறையிடுத்து வருகிறது. வாத்தி திரைப்படம் தமிழை தாண்டி தெலுங்கிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலில் அள்ளி வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் வாத்தி திரைப்படம் தெலுங்கில் தளபதி விஜயின் வாரிசு படத்தின் வசூலை..

நெருங்கி போய்க் கொண்டிருக்கிறதாம் இன்னும் ஓரிரு  தினங்களிலேயே  விஜயின் வாரிசு பட வசூலை முழுமையாக முறையடித்து புதிய சாதனை படைக்கும் என தெரிகிறது. விஷயத்தை கேள்விப்பட்ட தனுஷ் ரசிகர்கள் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கத்தில் இந்த செய்தியை வைரலாக்கி வருகின்றனர்.