அட இந்த மாஸ் ஹிட் சிவகார்த்திகேயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது வடிவேலுதான்.! இது தெரியுமா உங்களுக்கு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் களில் சிவ கார்த்திகேயனும் ஒருவர். இவர் தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து பின்னர் வெள்ளித்திரையில் ஹீரோவாக கலக்கி வருகிறார்.

இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது திரைப்படம் என்றால் அது வருத்தப்படாத வாலிபர் சங்கம் தான். இந்த படத்தை பொன்ராம் அவர்கள் இயக்கி சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி, ஷாலு ஷம்மு என பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் வெறும் ஒன்பது கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ஆனால் இந்த திரைப்படத்தின் வசூல் 45 கோடி வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

varuthapadatha valibar sangam

இந்த திரைப்படத்தின் இயக்குனர் பொன்ராம் அளித்த பேட்டி ஒன்றில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற டைட்டில் நடிகர் வைகை புயல் வடிவேலு தான் குறிக்கும் எனக் கூறியுள்ளார்.

அதற்கு காரணம் என்னவென்றால் வின்னர் திரைப்படத்தில் அந்த டயலாக்கை  பட்டி தொட்டி எங்கும் பரவியதற்கு காரணம் நடிகர் வடிவேலு தான் அதாவது வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற சங்கத்தின் பெயரில் வடிவேலு அவர்கள் செய்யும் சேட்டைகளை பலரும் ரசித்தனர்.

அவருக்காக இந்தப்படத்தின் கிளைமாக்ஸில் மிக பெரிய மாஸ் சீன் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தோம் ஆனால் வடிவேல் அவர்கள் சில திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Exit mobile version