வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குனருடன் இணையும் சசிகுமார்.! இது ஒரு கிராமத்து விருந்து.!

0
sasikumar
sasikumar

நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர் நீண்ட காலமாக ஒரு ஹிட் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார், சமீபத்தில் எடுத்த திரைப்படமும் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தனக்கு எது வருமோ அதை தேர்வு செய்து நடிக்க இருக்கிறார்.

கிராமத்து கதைகளில் நடிகர் சசிகுமார் மிகவும் அற்புதமான நடிப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில், கிராமத்து கதையில் புதிதாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படம் காமெடி பாணியில் உருவாக இருக்கிறது.

இதற்கு முன் இயக்குனர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன் என கிராமத்து பாணியில் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இவர் இயக்கிய சீமராஜா திரைப்படம், சுமாரான வரவேற்பை பெற்றதால் மீண்டும் மிகப்பெரிய ஹிட் கொடுப்பதற்காக இந்த கூட்டணி இணைந்துள்ளது.

இந்த கதையை முதலில் விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார் விஜய் சேதுபதி கதை பிடித்துப் போனது ஆனால் கால்ஷீட் கிடைக்காமல் மறுத்துள்ளார் அதன் பிறகு இந்த கதையை சசிகுமாருடன் கூறி கால்ஷீட் வாங்கி விட்டார் பொன்ராம்.

மேலும் இந்த திரைப்படத்தில் ராஜ்கிரணை நடிக்க வைக்க முயற்சி செய்தார் ஆனால் கால்ஷீட் கிடைக்கவில்லை, பின்பு சத்யராஜிடம் கால்ஷீட் வாங்கி உள்ளார் ஏனென்றால் வருத்தபடாத வாலிபர் சங்கம் திரை படத்தில் சத்யராஜ் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது அதனால் இந்தப் படத்தில் சத்யராஜ் நடிக்க இருக்கிறார்.

சசிகுமாருக்கு இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது அனைவராலும்.