வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்த தவசி காலமானார்.! திரைப் பிரபலங்கள் அதிர்ச்சி

dhavasi
dhavasi

கருப்பன் குசும்புக்காரன் என்ற வசனத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தவசி புற்றுநோயால் காலமானார்.

தேனி மாவட்டம் கோணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடிகர் தவசி இவர் கிழக்கு சீமையிலே என்ற திரைப்படத்தில் தனது சினிமா பயணத்தை தொடங்கினார் அதன்பிறகு 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் தற்பொழுது இவர் தனது மனைவியின் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த ஊரடங்கு முன்புவரை உடல்நலம் நன்றாக தான் இருந்திருக்கிறார் ஆனால் ரஜினியின் அண்ணாத்தே திரைப்படத்தில் நடித்த பொழுதும் நன்றாக இருந்தார் அதன் பிறகு ராசாத்தி என்ற சீரியலில் நடித்த போதுதான் விபத்தில் சிக்கியுள்ளார். தனியார் விடுதிக்கு காரில் செல்லும் போது தான் அவருக்கு விபத்து ஏற்பட்டது.

அதன் பிறகு லாக் டவுன் போடப்பட்டதால்  சூட்டிங் எதுவும் நடக்காததால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தார் இந்த காலகட்டத்தில்தான் புற்றுநோய் தீவிரமடந்துள்ளது தவசி அவர்களுக்கு. உடல் சடசடவென இறங்கி எலும்பும் தோலுமாக காட்சியளித்தார். தவசி நடிக்கும் காலத்தில் இளம் இயக்குனர்கள் சீன் சொல்லி தந்தால் அதை அப்படியே உள்வாங்கி கொள்வார் மெய்மறந்து சிரிப்பார் அந்த இயக்குனரை அப்படியே தழுவி தோளில் தட்டி பாராட்டுவார்.

அந்தளவு நல்ல உள்ளம் கொண்டவர் கட்டையான மீசையும் கம்பீரமான குரலும் தான் இவருக்கு அடையாளம், இவர் சிகிச்சைக்கு பணம் தேவை ஏற்பட்டதால் வெளிப்படையாகவே பணம் வேண்டும் என சமீபத்தில் ஒரு பேட்டியில் அறிவித்திருந்தார், இவரின் நிலைமையைப் புரிந்து கொண்ட பல சினிமா கலைஞர்கள் அவருக்கு உதவி தொகை வழங்கினார்கள்.

இருந்தாலும் தவசி நல்லா இருக்கும் பொழுது முறையான உடற்பயிற்சி இல்லாமலும் தண்ணியும் புகையிலுமாக விழுந்து கிடந்ததால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என கூறுகிறார்கள்,  இவரின் நிலைமையை பார்த்து பலரும் இவர் மீண்டு வர வேண்டும் என ஆசைப்பட்டார்கள்.

தீவிர சிகிச்சைக்கு பிறகு தவசி நலமுடன் இருப்பதாக அவர் மகள் தெரிவித்தார் ஆனால் திடீரென புற்று நோய் தீவிரம் அடைந்ததால் இன்று திடீரென தவசி காலமாகியுள்ளார் இவருக்கு தற்போது 60 வயது உணவு குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உடல்நலக் குறைவால் காலமானார் தவசியின் சிகிச்சைக்காக நடிகர் உட்பட பல்வேறு தரப்பில் இருந்து நிதி உதவியும் அளித்திருந்தார்கள் இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இவரின் மரணம் திரையுலகில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.