பீஸ்ட் படத்தின் சாதனையை முறியடிக்குமா வாரிசு.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

நடிகர் விஜய் அவர்கள் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து வாரிசு படம் வெளியாவதற்கு இன்னும் குறுகிய காலகட்டங்கள் இருக்கும் நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் வாரிசு படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்கள் மற்றும் இசை வெளியீட்டு விழா என பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக வாரிசு படத்தின் டிரைலருக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மேலும் வாரிசு படத்துடன் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதால் இரண்டு படத்தில் எந்த படம் வெற்றி அடையும் என ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து வாரிசு படத்தை போலவே துணிவு படத்தில் இருந்தும் அடிக்கடி அப்டேட்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் துணிவு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது இந்த ட்ரெய்லர் வெளியாகி ஒரே நாளில் 24 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அனால் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ஒரு நாளில் 30 மில்லியன் பார்வையாளர்கள் கடந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் துணிவு திரைப்படத்தின் டிரைலர் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லரின் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்த்திருந்தார்கள் ஆனால் அது நடக்கவில்லை ஆகையால் வாரிசு படத்தின் டிரைலர் பீஸ்ட் படத்தின் டிரைலர் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மேலும் நடிகர் விஜய் அவர்கள் இசை வெளியீட்டு விழாவில் தனக்குத்தான் தான் போட்டியாளர் என்று கூறியுள்ளார் அதனால் பீஸ்ட் படத்தின் டிரைலரின் சாதனையை வாரிசு படத்தின் டிரைலர் முறியடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அப்பாட்டு முறியடித்தால் வாரிசு படத்தின் ட்ரைலர் தான் யூடியூபில் அதிக பார்வையாலர்களை கடந்துள்ள தமிழ் திரைபட ட்ரைலராக இருக்கும் எனவும் கூறபடுகிறது. பொறுத்திருந்து பாப்போம் பீஸ்ட் படத்தின் ட்ரைலரின் சாதனையை வாரிசு படத்தின் ட்ரைலர் முரியடுக்குமா என்று.

Leave a Comment