பயத்தில் பொய் கணக்கை காட்டிய வாரிசு.. 200 கோடி வசூல் செய்யவே இல்லை – சினிமா பிரபலம் பேட்டி.!

0
varisu
varisu

விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் கதையாக உருவானது. அதே சமயம் இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து டாப் நட்சத்திர நடிகர் நடிகைகளான ஜெயசுதா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த் என பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்தனர்.

படம் பொங்கலை குறிவைத்து ரிலீஸ் ஆனது படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது இருப்பினும் நாட்கள் போகப்போக குடும்பங்களும் குழந்தைகளும் இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர் அதனால் நாளுக்கு நாள் வாரிசு படத்தின் வசூல் அதிகரித்த வண்ணமே இருந்தது.

ஐந்து நாட்கள் முடிவில் 150 கோடி வசூல் செய்த வாரிசு திரைப்படம் ஏழு நாள் முடிவில் திடீரென 210 கோடி வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆரம்பத்தில் வாரிசு திரைப்படம் அதிகம் வசூல் பெறாத நிலையில் கடைசி இரண்டு நாட்களில் எப்படி மிகப்பெரிய வசூலை..

அள்ளியது என்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் பிரபல விநியோஸ்தகரும் தமிழக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியன் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

thirupur subramaniyan
thirupur subramaniyan

200 கோடி வசூல் செய்ய 200 சதவீதம் வாய்ப்பே இல்லை சோலோவாக ரிலீஸ் என்றால் கூட பரவாயில்லை துணிவு படமும் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது ஆகையால் 200 கோடி வசூல் செய்ய வாய்ப்பே இல்லை என அடித்துக் கூறி உள்ளார். இந்த தகவல் தற்பொழுது அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.