200 கோடி வசூலித்தும் இன்னும் லாபத்தை எட்டாத வாரிசு திரைப்படம்..! வயிற்றில் புளி கரைக்க தயாரிப்பாளர்..!

0
vaarisu-01
vaarisu-01

சமீபத்தில் பொங்கலுக்கு விருந்தளிக்கும் வகையில் தளபதி விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் மற்றும் தல அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் என இரண்டு திரைப்படங்களுமே ஒரே நாளில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது.

அந்த வகையில் முதல் நாளிலிருந்து தமிழகத்தில் துணிவு திரைப்படத்தின் வசூல் மாபெரும் வெற்றி நடை போட்டு வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அந்த வகையில் உலக அளவில் பார்க்க போனால் வாரிசு திரைப்படம் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் நாளுக்கு நாள் இந்த இரண்டு திரைப்படங்களுக்கான போட்டி அதிகரித்து வரும் நிலையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தை கொடுத்துள்ளது இல்லையா என்ற தகவல்கள் இரண்டு திரைப்படங்களிலும் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இதுவரை வெளிவந்த வசூல் நிலவரத்தை கணக்கிட்ட இப்பொழுது தல அஜித் நடிப்பில் வெளியான தொழில் திரைப்படம் ஆனது எதிர்பார்த்ததை விட அதிக அளவு வசூல் செய்து மிகப் பெரிய லாபத்தை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது ஆனால் வாரிசு திரைப்படம் இன்னும் 50 கோடி வசூல் செய்தால் மட்டுமே லாபத்தை எட்டும் என்று தெரிவித்துள்ளார்கள்.

என்னதான் சொல்லுங்கள் துணிவு திரைப்படத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் புதுமையாகவும் பிரம்மாண்டமாகவும் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் வாரிசு திரைப்படம் ஒரு சீரியல் போல குடும்ப கதாபாத்திரம் கொண்ட திரைப்படம் தான் அந்த வகையில் இந்த திரைப்படம் இயக்க இந்த அளவுக்கு பட்ஜெட் போட்டது பலரையும் வாய்ப்பிலக்க வைத்துள்ளது.