இணையத்தை அலறவிடும் வாரிசு பட பாடல் அப்டேட்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

தெலுங்கு சினிமா இயக்குனருடன் முதன்முதலாக கைகோர்த்த தளபதி விஜய் அவர்கள் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பது ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கியது மட்டும் இல்லாமல் தில் ராஜ் அவர்கள் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் வியாபாரம் வெளுத்து கட்டி வருகிறது அந்த வகையில் இந்த திரைப்படத்தின் வியாபாரம் ஆனது துணிவு திரைப்படத்தை விட அதிகமாக இருப்பதாக தெரியவந்த நிலையில் அவை குறித்த முக்கிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் பழகுழுவினர்கள் ஒரு தகவலை வெளியிட்டு உள்ளார்கள் அதாவது அவர்கள் கூறியது என்னவென்றால் இன்று காலை 10:45 மணிக்கு இந்த திரைப்படத்தின் பாடல் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக தெரிவித்து இருந்தார்கள்.

மாலை ஆறு முப்பது மணி அளவில் இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்று வெளியாக உள்ளது  இவ்வாறு வெளிவந்த தகவல் இன் படி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருப்பது மட்டுமில்லாமல் இதனை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

எது எப்படியோ இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட போட்டி உள்ளது ஆகையால் எப்படியாவது ரசிகர்களை முன்பாகவே கவர்ந்து விட வேண்டும் என்ற காரணத்தினால் பிரமோஷனல் அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறது வாரிசு திரைப்படம்.

ஆனால் துணிவு  திரைப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை அது மட்டும் இல்லாமல் பிரமோஷன் வேலையாவது பிரமாண்டமாக செய்வார்கள் என நினைத்த நிலையில் தல அஜித் அவர்கள் என்னுடைய படத்திற்கு என் படம்தான் ப்ரமோஷன் என்று ஒரே வார்த்தையில் புரமோசனை முடித்து விட்டார்.

Leave a Comment