தளபதி விஜய் தற்பொழுது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா குஷ்பூ, சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா, ஸ்ரீமன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளதால் மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாலும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் இந்த திரைப்படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்திலிருந்து சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியானது.
ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் இருவரும் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படமும் இணையதளத்தில் படும் வேகமாக வைரலானது. வாரிசு திரைப்படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வருகின்ற தீபாவளி தினத்தில் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு திரைப்படத்திற்கு தமன் தான் இசையமைத்து வருகிறார். வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் அடுத்ததாக விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் சாயலில் இருக்கும் என கூறப்படுகிறது அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் வெளியாக்கிய மாஸ்டர் திரைப்படம் பாதி லோகேஷ் கனகராஜ் சாயலிலும் பாதி விஜய் பட சாயலிலும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்த ஸ்ரீமன் திரைப்படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி எனக் கூறி வம்சியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அவரின் பதிவில் வாரிசு பட வாய்ப்புக்கு நன்றி எப்பொழுதும் விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பை நான் தவறவிட மாட்டேன் நன்றி தில் ராஜி நன்றி இயக்குனர் வம்சி நன்றி என் ஆருயிர் நண்பா விஜய் உன்னுடைய ஆதரவை என்னால் மறக்கவே முடியாது எனக் கூறியுள்ளார்.
இதோ அந்த பதிவு.
@varisu Thank you for the opportunity in varisu any time when I get the chance to work with Thalapathy I don’t miss, thank you Dil RajuGaru thank you director VamsiGaru, thank you nanba yen aar uyir vijima I cannot I will not I should not forget the support, love you vjyma pic.twitter.com/K35D0XTyTP
— actor sriman (@ActorSriman) September 16, 2022