படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மரணம் அடைந்த வாரிசு பிரபலம்.! அதிர்ச்சியில் படக்குழு மற்றும் சினிமா பிரபலங்கள்…

தளபதி விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றது இதனை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சரத்குமார், பிரபு, யோகி பாபு, ராதிகா, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்திலிருந்து வெளியாக்கிய ரஞ்சிதமே பாடல் ரசிகர்களுடைய நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டும் இல்லாமல் யூடியூபில் புதிய சாதனைகளையும் படைத்தது. அதனைத் தொடர்ந்து தீ தளபதி பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது. இந்த நிலையில் சமீபத்தில் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம்  நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் இந்த ட்ரைலரை சீரியல் போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தில் சிறப்பு திரைப்படமாக வெளியாக இருக்கிறது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த திரைப்படத்துடன் மோதுவதற்காக அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் தினத்தில் களமிறங்கஇருக்கிறது.

எனவே இந்த இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது அதனால் இரண்டு தரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.  இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் பிரபலம் ஒருவர் மரணம் அடைந்தது வாரிசு பட குழுவினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெறுவதை பார்க்க முடியாமல் திடீரென அவர் மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாரிசு திரைப்படத்தில் பணியாற்றியுள்ள ப்ரொடக்ஷன் டிசைனர் சுனில் பாபு திடீரென மரணம் அடைந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இவர் மரணமடைந்துள்ளதால் ரசிகர்கள் பலரும் கவலையில் இருக்கிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment