கௌதம் இயக்கத்தில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் வாரணம் ஆயிரம், 2008-ல் வெளியாகி இந்த திரைப்படத்தில் சூர்யா சமீரா ரெட்டி திவ்யா ஸ்பந்தனா, குத்து ரம்யா, சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள், இந்த திரைப்படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சூர்யா பல கெட்டப்புகளில் நடித்திருந்தார் அதிலும் 80ஸ் காலகட்ட கெட்டப்பில் சிம்ரன் மற்றும் சூர்யாவுக்கு வரும் காட்சி மிகவும் பிரபலமடைந்தது, மேலும் முன்தினம் பார்த்தேனே என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது, இந்த பாடலில் தோன்றிய தனுஷ் பட நடிகர் யார் என்று தெரியுமா அவர் வேறு யாரும் இல்லை வேலை இல்லா பட்டதாரி படத்தில் வில்லனாக நடித்த அமுல்பேபி தான்.
தனுஷ் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவர் வேல்ராஜ், இவரின் முதல் திரைப்படமே மெகா ஹிட்டானது, இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி, தனுஷ், அமலாபால், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடித்திருந்தார்கள், இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் பெயர்தான் அமிதேஷ்.

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்நிலையில் இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் வனம் கொட்டட்டும் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார், இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபு, மடோனா செபஸ்டியன் நடித்திருந்தார்கள். வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அந்த படத்தில் வரும் முன் தினம் பார்த்தேனே என்ற பாடலில் பின்னாடி இருப்பது அமிதாஷ் தான்.