ஒரேடியாக 9 திரைப்பட வாய்ப்பை பெற்ற வரலட்சுமி..! அம்மணியின் வெற்றிக்கு இது தான் காரணமா..?

varalakshmi upcoming movie list: தமிழ் திரை உலகில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி இவர் பிரபல முன்னாள் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார்.

என்னதான் ஒரு பிரபலத்தின் மகளாக இருந்தாலும் அதை பயன்படுத்தி இவர் சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் இந்த நாள் வரை தனது கடின உழைப்பை திரைப்படங்களை வெளிகாட்டி வருகிறார்.

பொதுவாக நடிகை வரலட்சுமி தனக்கு  கொடுக்கும் சண்டைக் காட்சிகளுக்கு டூப் போடுவது கிடையாது அது எவ்வளவு பெரிய கஷ்டமான காட்சியாக இருந்தாலும் தனே முயற்சி செய்து நடித்து கொடுப்பாராம்.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் கமிட்டாகி உள்ளாராம்.

சமீபத்தில் நடிகை வரலட்சுமி கமிட்டாகி உள்ள திரைப்படங்கள் காட்டேரி,  பாம்பன்,  பிறந்தநாள் பராசக்தி,  கலர்ஸ்,  யானை,  சேசிங், நந்தி,  கிராக், ரணம் ஆகிய திரைப்படங்கள் ஆகும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment