நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார் இவர் முதன் முதலாக சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இவர் தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு அமைந்தது.
போடா போடி திரைப்படத்திற்கு பிறகு அடுத்ததாக தமிழை தாண்டி கன்னட திரைப்படத்தில் மிகவும் பிசியாக நடித்து வந்தார் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கத்தில் வெளியாக்கிய தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் சசிகுமாரும் நடித்திருந்தார் சசிகுமாருக்கு ஜோடியாக தான் வரலட்சுமி சரத்குமார் நடித்திருப்பார்.
பல நடிகைகள் ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன் என அடம்பிடிப்பார்கள் ஆனால் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனக்கு எந்த கதாபாத்திரமாக அமைந்தாலும் சரி அதனை ஏற்று கட்சிதமாக நடித்துக் கொடுப்பார் அந்த வகையில் வரலட்சுமி சரத்குமார் பாடி லாங்குவேஜ் மற்றும் குரலுக்கு வில்லி கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாக அமைந்தது.
அப்படி தான் வரலட்சுமி சரத்குமார் சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2 என பல திரைப்படங்களில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் அது மட்டும் இல்லாமல் நீயா 2 என்ற திரைப்படத்திலும் வில்லியாக நடித்திருந்தார். சமீப காலமாக வரலட்சுமி சரத்குமார் தனது உடல் எடையை குறைத்து பட வாய்ப்பு தட்டிச் சென்று வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது உடல் எடையை சுத்தமாக குறைத்து தெலுங்கு மற்றும் தமிழில் அதிக பட வாய்ப்பு பெற்று வருகிறார் இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருவார் அண்மையில் தன்னுடைய அப்பா சரத்குமார் மற்றும் தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதுவரை வரலட்சுமி சரத்குமார் டீன் ஏஜ் புகைப்படத்தை வெளியிட்டது கிடையாது ஆனால் முதல் முறையாக டீன் ஏஜ் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே அதிக லைக் பெற்று வருகிறார்.
