பிறந்தநாள் கொண்டாடும் மக்கள் செல்வி வரலட்சுமி சரத்குமார்.! வாழ்த்தும் முன்னணி பிரபலங்கள்!!

சிம்பு நடித்து ஹிட்டான படம் போடா போடி இத்திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.இப்படம் 2012ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டவர் வரலட்சுமி சரத்குமார் மேலும் இவர் தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த நிலையில்  யாரும்  எதிர்பார்க்காத  வில்லி அவதாரம் எடுத்தார் வரலக்ஷ்மி சரத்குமார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சர்க்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் தனது வில்லத்தனமான கேரக்டரில் திறம்படஏற்று நடித்து இருந்தார். இருப்பினும் சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது இதனை தொடர்ந்து பல சர்ச்சையான விஷயங்களில் சிக்கிக் கொண்டு வந்தார் நடிகை வரலட்சுமி.

இவர் ஹீரோயினாக நடித்த ‘வெல்வெட் நகரம்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக கம்பேக் கொடுக்கிறார்.இந்த நிலையில் தனது 35வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். வரலட்சுமி சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னணி நடிகர்களும் நடிகைகளும் மற்றும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

துணிச்சலும் தைரியமும் கொண்ட வரலட்சுமி சரத்குமார் அவர்களுக்கு அவரது ரசிகர்கள் மக்கள் செல்வி என்ற பெயரை சூட்டியுள்ளனர். இவர் பெண்களுக்கான அமைப்பு சக்தி என சேவை நடத்தி வருகிறார். ஊடகங்களுக்கும் எதற்கும் அஞ்சாமல் தனது வழியில் சரியாக போவதால்  ரசிகர்கள் மற்றும் மக்கள் அப்பெயரை சூட்டியுள்ளனர்.

Leave a Comment