“பீஸ்ட்” படம் வேற லெவல்.. என கூறிய வரலட்சுமி சரத்குமார் – பதிவை பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்.

beast-
beast-

தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் இன்று கோலாகலமாக வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது படம் முழுக்க முழுக்க ஆக்சன் காமெடி கலந்த திரைப்படமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தளபதி விஜயுடன் கைகோர்த்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளதாக கூறப்பட்டாலும் படத்தை பார்த்து விட்டு வெளி வரும் கருத்துக்கள் அனைத்தும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களாகவே இருக்கின்றன. வழக்கமான விஜய் படம் போல் இது இல்லை என்றும் இயக்குனரும் கோலமாவு கோகிலா டாக்டர் போன்ற படங்களைப் போல் பீஸ்ட் படத்தை  எடுக்கவில்லை.

இந்தப் படத்தில் காமெடியும் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆகவில்லை என ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர். ஒரு சில இடங்களில் பீஸ்ட் திரைப்படத்தின் கமெண்ட்ஸ் சரி இல்லை என்பதை உணர்ந்து கொண்ட திரையரங்குகள் முதல் நாளே டிக்கெட் விலையை குறைத்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் வரலட்சுமி சரத்குமார் பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு சில பதிவுகளை போட்டு உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. இன்று பீஸ்ட் நாள் பீஸ்ட் படக்குழுவினருக்கும் நடிகர் நடிகைகளுக்கும் வாழ்த்துக்கள். நெல்சன் விஜய் ஆகியோர் அவர்கள் தனது பணியை சிறப்பாக செய்து அசத்தியுள்ளனர்.

படத்தை விமர்சனம் செய்யுங்கள்  ஆனால் அதை இரண்டு மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் செய்யுங்கள் என கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் படம் நல்லா இருக்கு.. இல்லை.. எனஎப்படி தெரிந்து கொள்வது என கேட்டு வருகின்றனர்.