உலக நாடுகளையே நடு நடுங்க வைத்துள்ளது கொரோனா வைரஸ் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது, இந்தியாவிலும் மிக வேகமாகப் பரவி வருகிறது, அதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்த மக்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது, அதனால் தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறார்கள், இதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதனால் பல்வேறு பிரபலங்களும் மக்களும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள், அது மட்டுமில்லாமல் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வீடியோவையும் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் கொரோனா பற்றி பயமே இல்லை எனக் கூறும் சிலருக்கு வரலட்சுமி சரத்குமார் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
#varalakshmi pic.twitter.com/dMSMrIaf8z
— Tamil360Newz (@tamil360newz) March 25, 2020