ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்த வரலட்சுமி சரத்குமார்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார் முதலில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான போடா போடி என்னும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து என்ட்ரி கொடுத்தார் முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததை அடுத்து டாப் ஹீரோக்களுடன் படம் பண்ணி வந்த இவர் திடீரென வில்லி ரோலிலும் நடித்து வெற்றி கண்டார்.

அந்த வகையில் விஷாலின் சண்டைக்கோழி 2, விஜய்யின் சர்க்கார் போன்ற படங்களில் நடித்து மிரட்டினார் அதனைத் தொடர்ந்து வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் அதிகமாக குவிந்தது ஒரு கட்டத்தில் தெலுங்கில் இவர் அதிக படம் பண்ணினார். இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் சமீபகாலமாக ஹீரோயின் ஆகவும் நடித்து வருகிறார்.

இதனால் வரலட்சுமி சரத்குமாரின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. திரை உலகில் எப்படி போல்டான கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டுகிறாரோ அதே போல் தான் நிஜ வாழ்கையிலும் எதற்கும் பயப்பட மாட்டார் எல்லாத்தையும் வெளிப்படையாக போட்டு உடைக்கும் பழக்கம் கொண்டவராக இன்று வரை இருந்து வருகிறார்

இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் நடிகர் விஷாலை முதலில் காதலித்தார் ஆனால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இவர்கள் பிரிந்தனர் அதன் பிறகு தற்போது விஜய் டிவி பிரபலம் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில்  நடிகை வரலட்சுமி சரத்குமார் உடல் எடையை குறைத்து தற்பொழுது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார்..

varalakshmi
varalakshmi

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொழுக் மொழுக்கென்று இருந்த நடிகை வரலட்சுமியா இது எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்த நடிகை வரலட்சுமி சரத்குமாரின் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

varalakshmi
varalakshmi

 

Leave a Comment