அச்சு அசல் வரலட்சுமி போலவே இருக்கும் அவரது அம்மா.! இணையதளத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார் தமிழில் முதன்முதலாக சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இதனைத் தொடர்ந்து மதகஜராஜா, விக்ரம் வேதா, சத்தியா, சண்டகோழி 2, சர்க்கார், மாரி 2, நீயா 2  என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அதுமட்டுமில்லாமல் பல நடிகைகள் நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என இருப்பார்கள்.

ஆனால் நடிகை வரலட்சுமி சரத்குமார் படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் அதனை ஏற்று நடித்து வருவார் அதுமட்டுமில்லாமல் வில்லியாகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வில்லியாக சண்டகோழி 2 மற்றும் சர்க்கார் திரைப்படத்தில்  மிரட்டி இருந்தார்.

நடிகர் மற்றும் அரசியல் தலைவரான சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி இவரின் அம்மா சாயா தேவி பல வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள் அதன் பிறகு சரத்குமார் ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.  என்னதான் வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய அம்மாவை விட்டுப் பிரிந்து இருந்தாலும் சரத்குமார் மற்றும் ராதிகாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய அம்மாவின் 60வது பிறந்தநாளை அவரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து மிகவும் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

varalakshmi
varalakshmi

Leave a Comment