உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாக பல்லி போல் மாறிய வரலட்சுமி சரத்குமார்.!

சினிமா துறையில் தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் நடிகைகள் இருந்தாலும் அவர்கள் நடித்தால் ஹீரோ மற்றும் ஹீரோயினாக  தான் நடிப்பேன் என கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பார்கள் ஆனால் ஒரு சில நடிகர்கள் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை தனக்கு ஏற்ற கதாபாத்திரமாக இருந்தால் அதனை ஏற்று நடித்து வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படிதான் ஹீரோயின் ஆக மட்டும் நடிக்காமல் தனக்கு கிடைத்த வில்லி கதாபாத்திரம் குணச்சத்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் தனக்கு பிடித்த கதாபாத்திரமாக இருந்தால் நடித்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி என்ற திரைப்படத்தில் நிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்து  ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பலமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் மீண்டும் இரண்டாவது திரைப்படமாக தாரை தப்பட்டை என்ற சசிகுமார் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். இவர் தனக்கு ஏற்ற கதை எதுவாக இருந்தாலும் அதனை விரும்பி நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தமிழில் சத்யா, மிஸ்டர் சந்திரமௌலி, எச்சரிக்கை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரமும் தனக்கு கச்சிதமாக பொருந்தும் என நிரூபித்துக் காட்டியவர். அந்த வகையில் சண்டக்கோழி இரண்டாவது பாகத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார் அதனைத் தொடர்ந்து விஜயின் சர்கார், திரைப்படத்திலும் தனுஷின் மாரி திரைப்படத்திலும், நீயா 2 திரைப்படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார்.

கடைசியாக இவர் இரவின் நிழல், பொய்க்கால் குதிரை, காட்டேரி, யசோதா ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார். தற்பொழுது இவர் கைவசம் பல திரைப்படங்கள் இருந்து வருகின்றன அந்த வகையில் பாம்பன், பிறந்தால் பராசக்தி, கலர்ஸ், லங்கம், சபரி, என அரை டஜன் திரைப்படங்கள் தற்போது இவர் கைவசம் இருக்கிறது.

இவர் ஆரம்பத்தில் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது கொழுகொழு என பப்ளிமாஸ் போன்று இருந்தார் அதனால் இவருக்கு பெரிதாக பட வாய்ப்பு அமையவில்லை ஆனால் தற்பொழுது உடல் எடையை குறைத்து ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாக பள்ளி போல் மாறி உள்ளார் இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அட இது  வரலட்சுமி சரத்குமார என ஆச்சிரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment