அரபு குத்து பாடலுக்கு தனது பாணியில் நடனமாடிய வரலட்சுமி சரத்குமார்.! அதுவும் யாருடன் பார்த்தீர்களா.!

சமீபகாலமாக சமூக வலை தளத்தில் பல நடிகைகள் மற்றும் பிரபலங்கள் ரில் வீடியோவை வெளியிட்டு தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்கிறார்கள் அந்த வகையில் பல பிரபலங்கள் மிகவும் பிரபலம் ஆகி விட்டார்கள். இந்தநிலையில் தற்போது விஜய் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கிறது என ஒரு தகவல் கிடைத்துள்ளது.

இந்த பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் படத்திற்கு அனிருத் ராக்ஸ்டார் இசையமைத்துள்ளார் இந்த படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் அரபிக்குத்து பாடல் வெளியானது.

இந்த பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமானது அதுமட்டுமில்லாமல் பல பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் இந்த பாடலுக்கு வீடியோவை வெளியிட்டவர்கள் அந்தவகையில் சமந்தா, பூஜா ஹெக்டே, யாஷிகா ஆனந்த், ஷிவாங்கி என பலரும் இதற்கு நடனமாடி அதன் வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு உள்ளார்கள்.

அந்த வகையில் விஜய்யின் சர்க்கார் திரைப்படத்தில் நடித்த நடிகை வரலட்சுமி சரத்குமார்  அரபு குத்து பாடலுக்கு தன்னுடைய செல்லக்குட்டி நாயுடன் நடனமாடி அதன் வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார் அவர் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வந்தது.

இதோ அந்த வீடியோ

Leave a Comment