அந்த மாதிரியான கேரக்டர் எனக்கு வேண்டாம் என கரராக கூறியுள்ள வரலட்சுமி.! அதற்கான காரணம் இது தான்..

varalakshmi
varalakshmi

தமிழ் சினிமாவிற்கு வாரிசு நடிகையாக அறிமுகமாகி தற்பொழுது தமிழ், தெலுங்கு என்று ஏராளமான திரைப்படங்கள் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகை வரலட்சுமி இவர் சரத்குமாரின் மகளாக சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் கதாநாயகியாக மட்டுமல்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களிலும் நடித்து வரும் வரலட்சுமி சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளிவந்த யசோதா திரைப்படத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது இதனை அடுத்ததாக வீரசிம்மா ரெட்டி என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறாராம்.

இவரோட நடிப்பில் உருவாகி இருக்கும் வீரசிம்மா ரெட்டி திரைப்படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது இதனை அடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவர் இந்த அளவிற்கு பிசியாக நடித்து வருவதற்கு முக்கிய காரணம் இவர் தன்னுடைய குரூட்டை மாற்றி உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் ஹீரோயினாக நடித்து வரும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

மேலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் தைரியமான மற்றும் வில்லி போன்ற கேரக்டர்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறாராம். அந்த வகையில் சர்க்கார், சண்டக்கோழி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இவ்வாறு இது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி மார்க்கெட் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் நல்ல மார்க்கெட் பெற்றுள்ளார்.

ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் குண்டாக இருந்த இவர் தற்பொழுது தன்னுடைய உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறி வந்துள்ளார் இவருக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. சமீப பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வரலட்சுமி தனக்கு கிளாமர் போன்ற விஷயங்கள் செட் ஆகாது என்றும் வில்லியாக தொடர்ந்து நடிப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார் மேலும் கிளாமர் படத்தின் நடிப்பதற்கு நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்.

ஆனால் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சிலர் மட்டுமே அதற்கு தகுதியானவர்களாக இருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார். இவ்வாறு வரலட்சுமி இந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு காரணம் தாரதப்பட்டை திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் பாலா இயக்கிய நிலையில் வரலட்சுமி கதாபாத்திரத்தை செதுக்கியிருந்தார்.