பீட்டர் பாலை துரத்திவிட்டாரா வனிதா விஜயகுமார்.? நான்காவது ஆளை புடிசிட்டியா என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

0

vanithavijayakumar throw peterpaul:கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகமே எதிர்த்தாலும் பரவாயில்லை என பீட்டர்  பாலை வனிதா விஜயகுமார் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொண்டு எப்பொழுதும் போல் தனது வேலையை செய்து கொண்டிருந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கோவாவிற்கு குடும்பத்துடன் சென்று அங்கு விதவிதமாக புகைப்படங்களை எடுத்து இணைய தளங்களில் பதிவிட்டிருந்தார். மேலும் அதோடு மட்டுமல்லாமல் அங்கு குடித்துவிட்டு  கும்மி அடித்துள்ளனர்.

மேலும் இந்த நிலையில் கோவாவில் இருந்து வீட்டிற்கு வரும் போது குடித்துவிட்டு அவர் செய்த அலப்பறை தாங்க முடியாமல் வனிதா  பீட்டரை ரோட்டிலேயே இறக்கிவிட்டு விட்டு வந்து விட்டாராம். இப்படி ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியானது. ஆனால் அது உண்மையா இல்லையா என தெரியாமல் பலர் மண்டையை பிச்சி கொண்டனர்.

ஆனால் அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் அவர்கள் தனது சமூக வலைதளப்பக்கத்தில் “எல்லாருடைய வார்த்தையும் உண்மை ஆயிடுச்சு வீட்டிலிருந்து ரோட்டிற்கு துரத்தப்பட்ட பீட்டர் பால் என அவர் பதிவிட்டுள்ளார்”. மேலும் பீட்டர் பால் வேறு வழி இல்லாமல் பார்க்கிங் ஏரியாவில் குடித்துவிட்டு தங்கி இருப்பதாக தெரியவருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் இணையதளங்களில் அடுத்து நான்காவது ஆல் தயாராகி இருக்குமோ என பதிவிட்டு வருகின்றனர். இப்போவாவது வனிதா விஜயகுமாரின் உண்மை முகம் பீட்டர் பாலுக்கு vanithavijayakumarதெரிந்தால் சரி என கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் இவர்கள் இருவரையும் ஆடிய ஆட்டமென்ன என சகட்டு மேனிக்கு திட்டி வருகின்றனர்.