நயன்தாரா விக்னேஷ் சிவனை ஓரம் கட்டும் அளவுக்கு கோவாவில் போட்டோ ஷூட் நடத்திய வனிதா பீட்டர் பால்!! வைரலாகும் புகைப்படம்.

0

vanithavijayakumar peterpaul romantic photo shout like nayanthara vigneshshivan in goa: வனிதா விஜயகுமார் தற்போது சமூக வலைதளங்களில் எப்போதுமே பரபரப்புச் செய்தியை கொடுப்பதில் முன்னிலையில் உள்ளார். பிக்பாஸில் இருந்த போதிலும் சரி அதிலிருந்து வெளி வந்த போதும் சரி தன்னைப் பற்றிய செய்தியை அவ்வப்போது சமூகவலைத்தளத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இவர் பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு இந்த லாக்டவுன் சமயத்தில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் சமையல் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். பின்னர் அதனைத் தொடர்ந்து இவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்தி கசிந்தது.

பின்னர் தான் தெரியவந்தது பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளன எனவும் ஆனால் அவர்களுடன் வாழ விருப்பம் இலலாததால் அவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது பல பிரச்சனைகளைத் தாண்டி வனிதாவும் பீட்டர் பாலும் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வனிதாவின் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் வனிதாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்தோடு இவர்கள் கோவாவிற்கு சென்றுள்ளனர்.

அங்கு ஜோடியாக நயன்தாரா விக்னேஷ் சிவன் போல் இவர்களும் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து அதனை  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர் தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெருமளவில் கலாய்த்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் இதற்காக இன்ஸ்டாகிராமில் ஒரு லைவ் வருவார் எனவும் கூறுகின்றனர்.

vanithavijaykumar_12
vanithavijaykumar_12
vanitha vijaykumar3
vanitha vijaykumar3
vanithavijaykumar_2
vanithavijaykumar_2
vanithavijaykumar_1
vanithavijaykumar_1