வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி !! அடுத்த கணவர் யாரோ என கலாய்க்கும் ரசிகர்கள்!!

வனிதா அக்கா என்றால் தெரியாமல் யாரும் இருக்க முடியாது. இவர் பல படங்களில் நடித்து பிரபலமானதைவிட பிக்பாஸில் வந்து அதிக பிரபலம் ஆனார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நடிகர் விஜயகுமாரின் மகள். இவர் திரைப்பட நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

ஏற்கனவே இவருக்கு இரண்டு திருமணம் ஆகி டைவர்ஸ் வாங்கி விட்டார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் இவருக்கு இருக்கின்றன. இவர் இரண்டு பெண் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து கொண்டிருந்தார். இவரின் அப்பா குடும்பத்திலும் இவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை இப்படி இருக்கும் நிலையில்.

தற்போது இவர் மூன்றாவது திருமணமாக பீட்டர் பால்  என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் பிட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன இவருக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும்.

இவர்களுக்கு சமீபத்தில் திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாது. இந்த திருமணத்தினால் பீட்டர் பாலின் மனைவி பல பிரச்சினைகளை எழுப்பி வந்தார். இதுபற்றியே சமூக வலைதளங்களில் அதிகமாக சர்ச்சைகள் போய்க்கொண்டிருந்தது. இப்படியிருக்கும் இந்த சூழலில் தற்போது திடீரென பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி எனவே இவரை போரூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளார்களாம்.

இப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் நெட்டிசன்கள் வனிதாவுக்கு நான்காவது திருமணம். மாப்பிள்ளை யார் என்று தெரியவில்லை என கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வனிதாவின் அடுத்த கணவர் யார் என்ற போட்டி நடக்க போவதாகவும் கிண்டல் செய்துள்ளனர். தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

 

Leave a Comment