மீண்டும் மாலையும் கழுத்துமாக வணிதா, பீட்டர் பால்!! வைரலாகும் புகைப்படம்.

0

vanitha with peterpaul: என்னதான் வனிதா வாரிசு நடிகை என்றாலும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு தான் அவர் பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அதற்கு பின் லாக்டவுன் காலத்தில் இவர் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்தார். அதில் இவர் சமைக்கும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதன் பிறகு பீட்டர் பாலை  திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை எழுப்பி வந்தது அனைவரும் தெரிந்ததே. கடந்த சில மாதங்களாக சமூகவலைத்தளங்களில்  ஹாட் டாபிக்கே வனிதா தான்.

தற்போது இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நான்கில் ஒரு ஜட்ஜாக இவரும் இருக்கிறாளர். இவர் அடிக்கடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுவருவதை வழக்கமாக வைத்திருப்பார்.

அந்த வகையில் தற்போது இவர் தனது இரண்டு மகள்கள் மற்றும் கணவருடன் பணத்தால் ஆன மாலையை கழுத்தில் அணிந்தபடி புகைப்படம் எடுத்து அதனை இனையதலத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் எங்கள் வீட்டில் லட்சுமி குபேர பூஜை நடந்ததாகவும்  கூறியுள்ளார்.

அத்தோடுகூட 2020 ஆம் ஆண்டில் இனி வரக்கூடிய மாதங்களாவது நல்லதாக இருக்கட்டும் என்றும் இந்த ஆண்டை தன்னால் மறக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்ப்போது இந்த புகைப்படம் இணையதலத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

vanitha peter
vanitha peter