நான் 4 இல்ல 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.! ஒருவனுக்கு ஒருத்தி என்ற பழமொழிக்கு புதிய தத்துவத்தை கூறிய வனிதா.! வைரலாகும் வீடியோ

0

வனிதா விஜயகுமார் ஒரு திரைப்பட நடிகை ஆவார் இவர் விஜயகுமாரின் மகள் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். வனிதா விஜயகுமார் மூன்று முறை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனிதா வட இந்தியர் ஒருவரை நான்காவது முறையாக திருமணம் செய்து கொண்டார் என சமூகவலைதளத்தில் செய்திகள் வெளியானது.

மேலும் இவர் திருமணம் செய்து கொண்டவர் ஒரு பைலட் எனவும் மூன்று மாதத்துக்கு ஒரு முறைதான் வனிதாவை வந்து சந்திப்பார் எனவும் கூறப்பட்டது. இதனை வனிதாவின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் கூட உறுதி செய்ததாக தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ள வனிதா என்னைப்பற்றி சினிமாவிகடன் வெளியிட்ட தகவல் முழுக்க முழுக்க பொய்யானது என்றும் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் அப்படி ஒரு நபர் யாரென்று தெரியாது எனவும் கூறினார்.

கோயிலுக்கு சாமி கும்பிட போனால்கூட அவர்களுக்கு திருமணம் என யாராவது சொன்னால் அதனை உடனே செய்தியாக மாற்றி வெளியிடுகிறீர்கள் இது மற்றவர்களைப் பாதிக்காத அதேபோல் தான் இந்த செய்தி மிகவும் என்னை காயப்படுத்தியது சினிமா விகடன் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் இதற்கு சினிமா விகடனும் மன்னிப்பு கேட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது இந்தநிலையில் இந்த புகைப்படம் பிக்கப் ட்ராப் திரைப்படத்தின் புகைப்படம் என தெரியவந்துள்ளது. இந்த திரைப்படத்தின் பிரஸ்மீட்டில் பல கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு பட்டன பதில் கூறி வந்தார் வனிதா அந்தவகையில் வனிதாவிடம் நான்காவது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு வனிதா அவர்கள் நான்கு அல்ல 40 திருமணம் கூட பண்ணுவேன் நான் சாமியாராக போவது கிடையாது என கூறினார்.

மேலும் ஒருவனுக்கு ஒருத்தி என கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த வனிதா இந்தியாவில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை தவறாக புரிந்து கொள்கிறார்கள் மேல் நாட்டில் தான் அதை சரியாக செய்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பதை நாம் ஒருவருடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் பின்னர் அவர்களிடமிருந்து பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்தால் அந்த ஒருவருக்கு தான் உண்மையாக இருக்க வேண்டும் என புதிய அர்த்தத்தை கூறினார் மேலும் வழக்கம் போல் தான் ஒரு தனி ஆளாக நின்று சாதித்து காட்டி உள்ளேன் என கூறி பத்திரிக்கையாளர்களையும் கைதட்ட சொன்னது வேடிக்கையாக இருந்தது.