அம்மா மற்றும் மகளை வைத்து டிஆர்பி-இல் உச்சம் தொடர்பார்க்கும் விஜய் டிவியின் பிக் பாஸ்.! அப்போ கண்டிப்பா வீட்டில் ரகளை இருக்கு..

Bigg Boss 7: விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி விஜயகுமார் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு வனிதா விஜயகுமார் மகள் ஜோதிகாவும் பங்கேற்க உள்ளதாக புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ் இந்நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஆதரவு கிடைத்து வருகிறது. அப்படி டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரித்து வருவதனால் விஜய் டிவி வருடம் தோறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அப்படி 6 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் 7வது சீசன் தொடங்க உள்ளது கடந்த சீசன் பெரிதாக ரசிகர்களை தவறாத காரணத்தினால் இந்த முறை சர்ச்சை பிரபலங்களை களம் இறக்கி உள்ளனர். முந்தைய சீசன்களைப் போலவே பிக்பாஸ் சீசன் 7வது நிகழ்ச்சியையும் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க இருக்கிறார்.

அப்படி அது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே வீடு என்பதாக இருந்து வந்த நிலையில் தற்போது இரண்டு வீடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் 7வது சீசன் வித்தியாசமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் 90கிட்ஸ் மனதைக் கவர்ந்த நாயகியும், மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி விஜயகுமாரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், :என் உலக அழகி ஜோவிகா.. உன்னை நான் நேசிக்கிறேன், நீ என்ன செய்தாலும் கடவுள் அருள் உன்னிடம் நிறைந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் விஜயகுமாரின் மகள் சித்தி ஸ்ரீதேவியுடன் இணைந்து விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோதிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.