நடந்து முடிந்த வனிதாவின் திருமணத்தை ட்ரோல் செய்து வீடியோவை வெளியிட்ட ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ..

0

நடிகை வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார் இந்த திருமணம் வீட்டிலேயே விமர்சையாக நடைபெற்றது, தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக முதன் முதலில் அறிமுகமானார் வனிதா, பிறகு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகையாக வளர முடியவில்லை.

நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஆவார், இதற்கு முன் வனிதா இரண்டு திருமணங்கள் செய்து கொண்டார் ஆனால் இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிந்தது, அதன்பிறகு சொத்து பிரச்சனை சந்தித்த வனிதா பிறகு சோகத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய ஆக்ரோஷமான கேரக்டரை வெளிப்படுத்தினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா பிரபல தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பணியாற்றி வந்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார்.

அந்த யூடியூப் சேனலில் வனிதாவிற்கு உதவி செய்தவர் தான் பீட்டர் பால் இவர்கள் இருவரும் காதலித்து தற்பொழுது திருமணம் செய்து கொண்டார்கள், இவர்களின் திருமணம் வனிதாவின் மகள் சம்மதத்துடன் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.

திருமணத்தின்போது பீட்டர் பால் வனிதாவுக்கு முத்தம் கொடுத்தார், அந்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது இதைப்பார்த்த ரசிகர்கள் மோசமாக விமர்சித்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த வயதில் இரண்டு பெண் குழந்தை பெரிய ஆளாக இருக்கும் பொழுது மூன்றாவது திருமணமா என கருத்து தெரிவித்தார்கள்.

இந்த நிலையை மூன்றாவது திருமணத்தின் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வந்தது அதை பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை எடுத்து ட்ரோல் செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.