விஜயை விமர்சனம் செய்தவர்களுக்கு தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த வனிதா.! சர்ச்சைகளுக்கு விளக்கம்..

Actress vanitha: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த நடிகை வனிதா விஜயகுமார் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். இதன் மூலம் நெகட்டிவ் கமெண்டுகளை பெற்றாலும் இவர் எது சொன்னாலும் வைரல் ஆகுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தான் என்ன பேசினாலும் சர்ச்சையை எழுப்பும் சிலருக்கு வனிதா தைரியமாக தொடர்ந்து எந்த தயக்கமும் இல்லாமல் தான் மனதில் இனத்தை கூறி வருகிறார்.

அப்படி சமீபத்தில் விஜயின் ‘நான் ரெடி தான் வரவா’ பாடலுக்கு ஏற்பட்ட சர்ச்சைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். வனிதா விஜயகுமாரிடம் பத்திரிகையாளர் ஒருவர் இந்த பாடலில் விஜய் புகைப்பிடித்தல் குறித்த காட்சி வருவதைப் பற்றி கேட்டிருக்கிறார். அதற்கு நான் எவ்வளவு சிகரெட் குடித்து இருக்கிறேன் போய் பாருங்கள் நான் நடித்த எல்லா படத்திலும் பிடித்திருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் அந்தப் படத்தில் அவருடைய கேரக்டருக்கு ஏத்த மாதிரி கொண்டு வந்திருக்கிறார்கள் இதை ஒரு பொழுதுபோக்காக பார்த்துவிட்டு போகலாம் அதில் என்ன பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்ற கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டாம் அத்துடன் குழந்தைகளுக்கு பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் மார்வெல்ஸ், டிஸ்னி போன்ற படங்களை நீங்கள் தடை பண்ண வேண்டும்.

இதை வெறும் சினிமாவாக மட்டுமே பார்த்தால் பெரிதாக தெரியாது அத்துடன் இப்ப உள்ள குழந்தைகள் ரொம்ப தெளிவாகவும், அறிவாளித்தனமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எது நல்லது கெட்டது என்று தெரியும் அந்த விஷயத்தில் மட்டும் பெற்றோர்கள் கவனமாக இருந்தால் போதும் என கூறி இருக்கிறார். இதனை அடுத்து விஜய் சிகரெட் பிடிப்பதோ அல்லது மது அருந்துவதோ மாதிரி நடிக்கிற காட்சிகளை பார்த்து தான் குழந்தைகள் மனதில் நஞ்சு ஆகிறது என்று சொல்வது முட்டாள்தனம். படத்துக்கு எந்த மாதிரியான விஷயங்கள் தேவையோ அதை மட்டும் தான் நடிப்பவர்களுக்கும் சரி படத்தை இயக்குவர்களுக்கும் கவனம் செலுத்துவார்கள்.

அதில் எது நல்ல விஷயங்களோ அதை மட்டும் எடுத்துவிட்டு தேவையில்லாத விஷயங்களை விட்டால் அதுவே பாதி பிரச்சனைக்கு தீர்வாகும் என்று கூறியிருக்கிறார். ஒரு காலகட்டத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த வனிதா இவ்வாறு தற்பொழுது இவருக்கு சாதகமாக பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது. தற்போது தான் நடிகர் விஜய் அரசியல் வாழ்க்கையை துவங்கி இருக்கும் நிலையில் தொடர்ந்து இது பிடிக்காத பலரும் ஏராளமான சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment