மூன்றாவது திருமணத்திற்கு ரெடியான வனிதா.! அவரின் 19 வயது மகன் யார் தெரியுமா.? அச்சு அசல் அருண் விஜய் போலவே இருக்கிறார் பாருங்கள்.!

vanitha ready for third wedding : நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஆவார், இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து மாணிக்கம், நான் ராஜாவாகப் போகிறேன் சும்மா நச்சு னு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் சண்டே சமையல், சக்தி கொடு, ஸ்டார் டே அவுட் என பல நிகழ்ச்சிகளில் கெஸ்ட் ஆகவும் நடுவராகவும் பங்கேற்றுள்ளார், மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

இவர் பிக்பாஸில் வீட்டில் இருப்பதால் பிக்பாஸ் வீடே பரபரப்பாக இருந்தது, ஏதாவது கூறிக்கொண்டே பிக்பாஸ் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார், அதனால் இவரைப் பார்த்தாலே ரசிகர்கள் திட்டி தீர்ப்பார்கள், அதேபோல் 2020இல் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் நடுவராகவும் இருக்கிறார்.

நடிகை வனிதா குடும்ப பிரச்சினை காரணமாக தன்னுடைய அப்பா விஜயகுமார் இடம் பேசுவதே இல்லை, தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் வனிதாவிற்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோதிகா, ஜெயின் என்ற 2 மகள்களும் ஆக மொத்தம் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இவரின் மூத்த மகன் ஸ்ரீஹரி 2001 ஆம் ஆண்டு பிறந்தார் ஆனால் சமீப காலமாக தன்னுடைய மகனைப் பிரிந்து இருக்கிறார், அதேபோல் வனிதா ஒரு நள் தன்னுடைய மகன் மீண்டும் திரும்ப வருவான் என கூறினார் இந்தநிலையில் வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் விஜய் ஸ்ரீஹரியின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாக்குறதுக்கு அப்படியே விஜயகுமார் மாதிரியே இருக்கிறார் என கருத்து தெரிவித்தார்கள். அதுமட்டுமில்லாமல் நடிகர் அருண்விஜய் வனிதாவின் சகோதரர் ஆவார் அவர் போலவே வனிதாவின் மகன் இருப்பதாக கூறுகிறார்கள்.

மேலும் வனிதா இந்த போட்டோவை பதிவிட்டு என்னோட தளபதி சூப்பர் ஸ்டார், தல உலகநாயகன், என்னோட லைஃப் எல்லாமே என்னோட மகன் மட்டும் தான் என சில மாதங்களுக்கு முன்பு புகழ்ந்து தள்ளினார், இந்த நிலையில் வனிதா தற்போது மூன்றாவது திருமணத்திற்கு தயாராகி விட்டார், இவர் காதலிக்கும் நபரின் பெயரை கையில் பச்சை குத்தியுள்ளர் அதே போல் வனிதாவவின் பெயரையும் அவர் பச்சைக் குத்தியுள்ளார். இவர்கள் இருவரும் அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் வனிதாவின் மகன் திரும்ப வருவான் என வனிதா நினைத்துக் கொண்டிருக்கிறார். அது என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், மேலும் தற்பொழுது வனிதாவின் மகன் புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

vanitha-son
vanitha-son

Leave a Comment