மறுபடியும் நான் சீரியலுக்கு போயிடுவேன்.! பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து வாணி போஜன்.

தமிழ் சினிமாவில் நடித்து வரும் பல நடிகைகள் சீரியல் மற்றும் தொலைக்காட்சிகள் மூலமாகவும், விளம்பரங்களில் இருந்தும் வந்தவர்கள்தான், அந்தவகையில் சீரியலில் இருந்து வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை வாணி போஜன்., இவர் மாயா என்ற தொடரின் மூலம்தான் சின்னத்திரையில் நுழைந்தார் இதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தெய்வமகள் சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் இல்லத்தரசிகளையும் கொள்ளையடித்தார்.

வாணி போஜன் க்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது, வாணி போஜன் தெய்வமகள் சீரியலை தொடர்ந்து எந்த ஒரு சீரியலிலும் நடிக்காத நிலையில் தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருக்கு முதலில் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, இதை தொடர்ந்து புதுமுக இயக்குனர் இயக்கிய ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஓ மை கடவுளே திரைப்படத்தில் அசோக்செல்வன் ,ரித்திகா சிங் , வாணிபோஜன் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது, வாணிபோஜன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தது,

இதனாலேயே வாணிபோஜன் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார்.அந்த பேட்டி முடிவதற்கு முன்பே வாணிபோஜன் எழுந்து சென்றுவிட்டார், தற்பொழுது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் வாணி போஜன்னிடம் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் சம்மந்தப்பட்ட அனுபவங்களைப் பற்றி கூறுங்கள் எனக் கேட்டார்கள்.

அதற்கு வாணி போஜன் அட்ஜஸ்ட்மென்ட் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல்,இந்திய சினிமாவிலும் இருக்கிறது, ஏன் எனக்கும் நடந்து இருக்கிறது. ஆனால் நான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. என்னிடம் நேரடியாக வந்து யாரும் அந்த மாதிரி பேசவில்லை, மேனேஜர் கிட்ட மட்டும் இது மாதிரி சிலபேர் கேட்டிருக்காங்க, அதை அவரே பேசி முடித்து விடுவார் என்னிடம் வந்து நேரடியாகவோ இல்லை போன் மூலமாகவோ அதுமாதிரி யாரும் கேட்கவில்லை எனக் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் அவர் கூறியதாவது அது மாதிரி பிரச்சனை வந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்க ஒத்துக்கொள்ள மாட்டேன், சீரியலுக்கே போய் விடுவேன் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இது மாதிரி பிரச்சினை நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அதேபோல் இனிமேல் இது மாதிரி நடக்காது என நம்புகிறேன் எனக் கூறினார்.

மேலும் தொகுப்பாளர் நீங்கள் சின்னத்திரையில் இருந்து மேலே செல்ல செல்ல இதுபோல் ஒரு சில விஷயத்தை ஒத்துக்கொண்டு உள்ளீர்களா என மீண்டும் மீண்டும் கேட்டார், அதற்கு வாணி போஜன் அவர்கள் மிகவும் கடுப்பாகி எழுந்து சென்றார். பின்பு மீண்டும் வாணி போஜன் வந்து இது எல்லாம் சும்மா ஒரு நாடகம் என்றும் பிராங்க் செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள் அதனால் தான் இப்படி செய்தேன் என சிரித்துக்கொண்டே கூறினார்.

இந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment