தமிழ் சினிமாவில் பல நடிகைகள் சீரியலில் இருந்து தொகுப்பாளினியாக இருந்தும் வெள்ளித்திரைக்கு வந்தவர்கள், அந்தவகையில் பிரியா பவானி சங்கர் முதல் தற்பொழுது வாணி போஜன் வரை சினிமாவில் நுழைந்து விட்டார்கள். நடிகை வாணி போஜன் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா சீரியல் மூலம் சின்னத்திரையில் கால் தடம் பதித்தவர்.
இதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்ட தெய்வமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து இல்லத்தரசி மனதில் இடம் பிடித்தவர், வாணி போஜன் என்றால் கூட பலருக்கு தெரியாது சத்யா என்றால் அனைவருக்கும் தெரியும் ஏனென்றால் தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.
இப்படி சின்னத்திரையில் கலக்கி கொண்டிருந்த வாணி போஜனுக்கு தற்போது வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்துள்ளது, பேட்டை படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் தயாரிக்கும் சீரியலில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன.