மஞ்ச காட்டு மைனாவாக மாறிய வாணி போஜன்.! வைரல் போடோஸ்…

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை வாணி போஜன் இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தனது பக்கம் இழுத்து வருகிறார். மேலும் நடிகை வாணி போஜனை ரசிகர்கள் அன்பாக சின்னத்திரை நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர்.

மேலும் நடிகை வாணி போஜன் அவர்கள் சினிமாவில் வருவதற்கு முன்பு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்து பிரபலமானார்.அதனை தொடர்ந்து நடிகை வாணி போஜன் சீரியலில் இருக்கும் போது இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் இந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அப்படி அவர் அடுத்ததாக ட்ரிபிள்ஸ் என்ற வெப் தொடரில் நடித்து பிரபலமானார்.

அதன் பிறகு நடிகர் விக்ரம் அவர்கள் நடிப்பில் வெளியான மகான் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜன் அவர்கள் நடித்திருந்தார் ஆனால் இந்த படத்தில் வாணி போஜன் நடித்த காட்சிகள் அனைத்தையும் நீக்கி விட்டார்கள். என்னதான் இந்த படத்தில் இருந்து அவருடைய காட்சி நீக்கப்பட்டு இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துக் கொண்டே தான் இருந்தது.

அப்படி அடுத்ததாக அவர் நடித்த திரைப்படம் தான் தமிழ் ராக்கர்ஸ் இந்த திரைப்படம் சோனி லைவில் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார் நடிகை வாணி போஜன். இவர் பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், உள்ளிட்ட பல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இப்படி படங்களில் பிசியாக இருந்தாலும் நடிகை வாணி போஜன் அவபோது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிரப்புடைவையில் அசத்தலான லுக்கில் நின்று போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

vani bhojan
vani bhojan
vani bhojan
vani bhojan
vani bhojan
vani bhojan
vani bhojan
vani bhojan

Leave a Comment